ஜன.15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப்படைகளை திரும்ப பெற உத்தரவு: பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஜனவரி 15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பெண்டகன் அறிவித்துள்ளது. சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளித்து வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி 15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும் இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

Related Stories: