புரெவி புயலால் 3வது நாளாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்-சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல் : புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் மூன்றாவது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மூன்றாவது நாளாக தொடர்ந்து இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

நேற்று காலை முதலே கொடைக்கானலில் லேசான வெயிலும், தூறலும் மாறி மாறி அடித்தது. புயலின் தாக்கம் குறைந்துள்ள இந்தச் சூழலில் மூடப்பட்டு உள்ள சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வரை சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,`` கொடைக்கானலில் புயலின் தாக்கத்தை அறிந்த பிறகுதான் இந்த சுற்றுலா இடங்கள் திறக்கப்படும். இன்று திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று கூறினர்.

Related Stories: