கம்பத்தில் கஞ்சா வளர்ப்பை தடுக்க நடவடிக்கை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

கம்பம் : தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ளதால், இப்பகுதியில் கஞ்சா வளர்த்து கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பத்தில் கஞ்சா இல்லா நகராக மாற்ற  எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உள்ளூர் போலீஸ் மட்டுமல்லாமல், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், போதை பொருள் தடுப்பு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்துமாறும், குறிப்பாக மலையடிவாரப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், கம்பம் மேற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா பதுக்கல், கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதா? என கண்டறிய ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. வானில் வட்டமடித்த டிரோன் கேமராவில் பதிவான புகைபடங்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான இடத்தில் மோப்ப நாய் வெற்றியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா ஏதும் பிடிபடவில்லை. மேலும் முதல் முறையாக கஞ்சா தேடுதல் வேட்டைக்கு ட்ரோன் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிர ரோந்து பணியில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி எஸ்.ஐ திவான்மைதீன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: