ஓசூர் அருகே போடூர் பள்ளத்தில் 30 யானைகள் முகாம்-விவசாயிகள் அச்சம்

ஓசூர் :ஓசூர் அருகே போடூர்பள்ளம் பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ஓசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த  30க்கும் மேற்பட்ட யானைகள், சானமாவு வனப்பகுதிக்கு கடந்த வாரம் வந்து முகாமிட்டிருந்தன. அங்கு ராகி பயிர்களை சேதப்படுத்தியதால் யானைகளை ராயக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.

ஆனால், 2 நாட்களுக்குள், மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு யானைகள் வந்தன. இதனால், சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சானமாவு வனப்பகுதி அருகிலுள்ள கிராமப்பகுதியில் ராகி, நெல் உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், 30க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது போடூர் பள்ளத்தில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: