×

ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி  உறுதிமொழி ஏற்றனர். சட்டமன்ற தேர்தலில் ஒன்றுபட்டு உழைத்து 3வது முறையாக அதிமுக ஆட்சியமைய உறுதியேற்போம் என உறுதியேற்றனர்.

Tags : AIADMK ,Jayalalithaa , AIADMK
× RELATED ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இந்த தேர்தலை...