பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு: 453 பேர் கலந்துகொண்டனர்

சென்னை:  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 21ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து, 23ம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது. அதை தொடர்ந்து நிவர் புயலை அடுத்து கடந்த 30ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3ம் தேதியின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 122 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 996 இடங்களும் காலியாக உள்ளன. அதேபோல் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 150 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 985 இடங்களும் காலியாகவுள்ளன. இந்த நிலையில் தரவரிசை எண் 2151 முதல் 2622 வரை உள்ள 472 பேர்களுக்கு நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டது.  காலை 9 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். மொத்தம் 472 பேர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் 453 பேர் கலந்துகொண்டனர்.

Related Stories: