கார்ப்பரேட்களின் லாபத்திற்கு மட்டும் செயல்படுவதை கண்டித்து நாடு முழுவதும் பிரதமர் உருவபொம்மைகள் எரித்து எதிர்ப்பு: அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு

சென்னை: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏஐகேஎஸ்சிசி தமிழ் நாடு அமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களின் கொள்ளை லாபத்திற்காக மட்டுமே மோடி அரசு செயல்படுவதால் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை இன்று (டிச.5) நாடு முழுவதும் எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது.

 மேலும் வேளாண் விரோதசட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 9ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: