×

சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுதால் மக்கள் அவதி

திருத்தணி :  திருத்தணியில்  21 வார்டுகள், ஒன்றியத்தில் 27 வார்டுகள் மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான கிரயப்பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம்  திருமணப்பதிவு பத்திரம் ரத்து,  உயில்,  வில்லங்க சான்று, அடமானம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை திருத்தணி காந்தி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். தற்போது இந்த அலுவலகத்தில் பயோமெட்ரிக்  மற்றும் ஆன்லைன் மூலமே பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள்   வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பதிவுத்துறை சர்வர் வேலை செய்யவில்லை.  இதனால் சுமார் ஒரு மணி நேரமாக மக்கள் காத்திருந்து கடும் அவதிப்பட்டனர்.


Tags : People suffer because of server failure in affiliate office
× RELATED வேலூர் மாவட்டத்தில் சர்வர் பழுதால்...