×

ஒரே நாளில் இரண்டு விபத்து: வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் மற்றும் மாநெல்லூரை  சேர்ந்த பெண்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இவர்கள் வழக்கம்போல் கம்பெனி வேனில் சென்று  கொண்டிருந்தனர். வேனை  வினோத்(27)  என்ற டிரைவர் ஓட்டினார். இதில் மாநெல்லூரை சேர்ந்த சுதா(30), பாரதி(39), தனம்(37), ஆர்.எஸ்.பாரதி(36), சவுமியா(32), மோகனா(36), ஜீவிதா(32), ஜெயா(30), கவுசல்யா(31), புனிதா(30), ஹேமலதா(32) ஆகிய  11 பெண்கள் இருந்தனர். இதில்  9 பேர், மாநெல்லூரை சேர்ந்தவர்கள், 2 பேர் கண்ணம்பாக்கத்தை சேர்ந்தவர்கள்.  இந்நிலையில், வேன் மாநெல்லூரை தாண்டி செல்லும்போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்பியது. அப்போது மாடுகள் குறுக்கே  வந்ததால் டிரைவர் வினோத் பிரேக் போட்டார். அப்போது மழை காரணமாக வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

தகவலறிந்த மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், திமுக ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு ஆகியோர் விபத்தில் சிக்கிய டிரைவர் உள்பட 12 பேரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி  ரெட்டம்பேடு மற்றும் வழுதலம்பேட்டில் இருந்து 8 பெண்களை அழைத்து கொண்டு அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலைக்கு ஒரு வேன் சென்றது. வேனை டிரைவர் அஜீத்(25) ஓட்டினார். கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோயில் மேம்பாலம்  பகுதியில் சென்றபோது வேன் மழை காரணமாக நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அஜீத் மற்றும் வேனில் இருந்த லட்சுமி(18), மோனிஷா(19), அமுதா(21), சுப்புலட்சுமி(20), லாவண்யா(20), அனிதா(18),  சுதா(18), மோகனசுந்தரி(19) ஆகியோர் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தோர் விபத்தில் சிக்கிய 8  பெண்கள்  உள்ளிட்ட 9 பேரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தன

Tags : crashes ,Van , Two crashes in one day: Van overturns, 21 injured
× RELATED பைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்