×

திருக்குறள் முற்றோதல் 3 மாணவர்கள் தேர்வு

திருவள்ளுர்: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களில் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்க கலெக்டர் அலுவலகத்தில் திறனறித்தேர்வு நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் ₹10 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழும் வழங்கப்படுகிறது. மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமியை உறுப்பினர் செயலாளராகப் கொண்ட திறனறியும் குழுவில் உள்ள 5 நடுவர்களால் நடத்தப்பெற்ற இதில்  மாவட்ட அளவில் 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவன் தி.கௌதம், மீஞ்சூர் சகாயமாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி தி.பிரவீணா, மீஞ்சூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி பி.வனீஷ்கா ஆகியோர் திறனறிக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Thirukkural Murodhal , Thirukkural Murodhal 3 students selected
× RELATED பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 3 கிமீ...