×

மலை உச்சியில் கொட்டகை அமைத்து ஆன்லைன் கல்வி: அசத்தும் பழங்குடி மாணவர்கள்

வி.கே.புரம்: நெல்லை மாவட்டம், காரையாறு பகுதி முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு செல்போன் டவர் அமைக்க அனுமதி இல்லை. இதனால் காரையாறு மற்றும் விகேபுரம் பள்ளிகளில் 10, 11  மற்றும் 12வது வகுப்பு பயிலும் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் காரையாறு மயிலாறு காணிக்குடியிருப்பின் பின் பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 300  அடி உயரமுள்ள சொங்கமொட்டை மலை உச்சியில் செல்போன் டவர் கிடைப்பதை அறிந்தனர். இதையடுத்து அந்த இடத்தில் வெயில், மழையிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொட்டகை அமைத்து ஆன்லைன் வகுப்பில்  பாடம் கற்று வருகின்றனர். தற்போது இந்த முகாமில் 7 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் கல்வி கற்று வருகின்றனர்.Tags : hill , Set up a shed at the top of the hill Online Education: Awesome Indigenous Students
× RELATED சாமுண்டி மலையில் தீவிபத்து