×

வேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர் பங்கேற்பு

சென்னை: வேல்யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார் என்று எல்.முருகன் கூறினார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நடத்தப்பட்டு வரும் வேல் யாத்திரைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. 5ம் தேதி  திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய பகுதிகளுக்கு வேல் யாத்திரை சென்றடைகிறது. நாளை  திருச்செந்தூரில் காலை வழிபாடு நடைபெறுகிறது. 7ம் தேதி இந்த வேல் யாத்திரை நிறைவடைகிறது.  இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சவுகான்சிங் கலந்து கொள்கிறார்.  Tags : Velyattirai closing ceremony Madhya Pradesh Principal Participation
× RELATED ம.பி. விவசாயிகளுடன் காணொலி வாயிலாக பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி பேச்சு..!!