×

பொன்னேரி அருகே நள்ளிரவில் கைவரிசை கான்ட்ராக்டர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை

* 6 கிலோ வெள்ளிப்பொருட்களும் அபேஸ்
* மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

சென்னை:  பொன்னேரி அருகே கான்ட்ராக்டர் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ரொக்கப்பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது, பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனிநாதன் (51). திமுக கிளை செயலாளர். கட்டிட கான்ட்ராக்டராகவும் உள்ளார். இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது உறவினரை  திருவொற்றியூறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.  வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற முனிநாதன், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து அதிலிருந்த 200 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, பொன்னேரி போலீசில் முனிநாதன் புகார் கொடுத்தார்.  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து விட்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்வெளி  வரை ஓடிச் சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை  தேடி வருகின்றனர். இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தகவலறிந்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் ேநற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பொன்னேரி உட்கோட்ட  பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

கொள்ளை நடந்ததுஎப்படி?
முனிநாதன் வீட்டின் பின்பக்கம் வயல்வெளியாக உள்ளது. ஆட்கள் நடமாட்டமில்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே ெசன்று, படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து  நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை ெகாள்ளை அடித்து சென்றுள்ளனர்.

Tags : handcuff contractor house ,Ponneri , 200 shaving jewelery robbery at handcuff contractor house at midnight near Ponneri
× RELATED அருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை