தயாநிதி மாறன் எம்பி அறிக்கை முரசொலி மாறனுக்கு எவரும் ஆலோசகராக இருந்ததில்லை

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு எவரும் அரசியல் ஆலோசகராக இருந்ததில்லை என்று தயாநிதிமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை  எம்பியுமான தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள்,  ரஜினி காந்தால் துவங்கப்பட உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜூனமூர்த்தி, எனது தந்தை  மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அதுபோன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான  செய்திகளை வெளியிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>