×

ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து

இந்திய அணி பேட்டிங்கின்போது, ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜாவின் மட்டையின் மேல் விளிம்பில் பட்டுத் தெறித்து அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அந்த தாக்குதலின் வேகத்தை தாங்க  முடியாமல் களத்திலேயே தடுமாறி விழுந்தார் ஜடேஜா. தசைநார் காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடி அதிரடியாக 23 பந்தில் 44 ரன் விளாசிய அவர், தலையில் ஏற்பட்ட இந்த காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை  ஏற்பட்டது. ‘மூளை அதிர்ச்சி’யால் இந்திய அணி பந்துவீச்சின்போது அவர் களமிறங்க முடியாததால்,  மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் யஜ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். ஜடேஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு  வருகிறார்.Tags : The ball that saw the word helmet
× RELATED இந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து