சர்வதேச நல்லாசிரியராக தேர்வு: 7.4 கோடி பரிசு வென்ற மகாராஷ்டிரா ஆசிரியர்: சக போட்டியாளர்களுக்கு பணத்தை பகிர்ந்து பெருந்தன்மை

மும்பை:  சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான லண்டனை சேர்ந்த ஒரு குழுமம் வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியில் ஆர்வம், கடின உழைப்பு, மாணவர்களின்  திறன் மீதான நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது, மகாராஷ்டிர மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டம், பரிடிவாடி கிராமத்தை சேர்ந்த  ரஞ்சித்சிங் டிசாலே என்பவருக்கு கிடைத்துள்ளது. 32 வயதான இந்த ஆசிரியர், கியூஆர் குறியீடு முறை மூலம் பாடப்புத்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பரிடிவாடி கிராம தொடக்கப்பள்ளியில் உள்ளூர் மொழியில் பாடப்புத்தகத்தை  உருவாக்கி, மாணவ, மாணவிகளுக்கு தனியார் கியூ ஆர் கோடு உருவாக்கியுள்ளார். அதன்மூலம் பாடங்களை, ஒளி, ஒலி வடிவிலும் கதையாகவும் தொகுத்து பயிற்றுவித்துள்ளார். இது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மாநிலத்தின் அனைத்து  வகுப்புகளுக்கும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

தேசிய கல்விய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அனைத்து பாடப்புத்தகங்களிலும் கியூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகமும் அறிவித்தது. அதோடு, பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கு சிறந்த  முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்கின்றனர். குழந்தைத் திருமணங்களையும் இந்த முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இவருக்கு சர்வதேச அளவில்  சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச அளவில் 10 பேர் இறுதி செய்யப்பட்டு அதில் ஒருவராக ரஞ்சித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இவருக்கு ஒரு மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி இவருக்கு கிடைத்துள்ளது.

இதில் 50 சதவீத தொகையை இறுதி போட்டியாளராக தேர்வான 9 பேருடன் சமமாக பகிர்ந்து கொள்ளப் போவதாக ரஞ்சித்சிங் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிரியப்பணி என்பது பகிர்ந்து கொடுப்பதில்தான் இருக்கிறது.  இதனால் பிற இறுதி போட்டியாளர்களின் நாட்டை சேர்ந்த மாணவர்களும் பயன்பெறுவார்கள் என கூறியுள்ளார். அதோடு, பரிசுத்தொகையில் 30 சதவீதத்தை ஆசிரியர்கள் புதுமை படைக்க உதவுவதற்கான நிதியாக உருவாக்க விரும்புவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>