வேட்பாளர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல், 8 கட்டங்களாக நடக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இத்தேர்தலில் ஏற்கனவே 2 கட்டங்கள் முடிந்த நிலையில், 3ம்  கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணி வரை பூஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ரஜோரியில் 64.48 சதவீதம், ரீயாசியில் 62.37 சதவீதம், சம்பா 60.21 சதவீதம், ரம்பன் 58.10 சதவீதம், கிஷ்வார் 57.26 சதவீதம், ஜம்மு 57.96  சதவீதம், கதுவா 53.60 சதவீதம் மற்றும் தோடாவில் 50.49 சதவீதம் வாக்குகள் பதிவானது. மிகவும் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 9.31 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிட்ட அப்னே கட்சி வேட்பாளர்  கனியேவை ஆனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டனர். இதில், அவருக்கு கை, கால்களில் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். இருப்பினும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

Related Stories:

>