×

வயலில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

சிங்கம்புணரி: வயலில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காவணி வயல் பகுதியில் மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடக்கிறது. இதுபோன்று பல இடங்களில் வயலில் சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.

மேலும் வகுத்தெழுவன்பட்டி, அணியம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் இக்கிராமங்கள் இருளில் மூழ்கி வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி பணி செய்வதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்வதோடு வயல்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident , Power cord
× RELATED சாலையோரங்களில் கழிவுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்