×

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மைசூர் பிபிவி பல்கலையுடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் பழனிச்சாமி அழுத்தம் தர வேண்டும். மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும் திட்டமிட்டு முடக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும், 6 ஆண்டுகால பாஜக ஆட்சியிலும் தமிழாய்வு நிறுவனம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே திருவாரூர் மத்திய பல்கலையுடன் இணைக்கும் முயற்சி திமுகவின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடர்பாக மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Stalin ,Institute of Classical Tamil Studies ,Chennai , Stalin
× RELATED சென்னையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது