×

காங். தலைவராக ராகுல் தொடர மாட்டார் : என்சிபி தலைவர் சரத்பவார் பேட்டி

புனே, :ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தொடரமாட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ேதால்வியை சந்தித்ததால், அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இடைக்கால தலைவராக அவரது தாயான சோனியா காந்தி பொறுப்பேற்றார். இருந்தும், ஓராண்டுக்கு மேலாகியும் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், கட்சியின் 23 மூத்த தலைவர்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இருந்தும் அடுத்த மாதம், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு ெசய்வதற்கான கட்சியின் ேதர்தல் குழு தீவிரப்பணியை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவன தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவாரிடம் பேட்டி கண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை மற்றும் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘அவர், மீண்டும் தலைவராக தொடரமாட்டார் என்றே எனக்கு தெரிகிறது’ என்றார்.

ராகுல் காந்தியை ஒரு தலைவராக கருத நாட்டு மக்கள் தயாராக உள்ளனரா? என்று கேட்டதற்கு,  ‘இது தொடர்பாக சில கேள்விகள் உள்ளன’ என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குறித்து காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்துக்கள் (ஒபாமா சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் ராகுல்காந்தி குறித்து குறிப்பிடுகையில், ஆசிரியரை கவர்ந்திழுக்கும் ஒரு மாணவரை போல் உள்ளார். ஆனால் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் இல்லை. ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவராக உள்ளார்.) குறித்து கேட்டதற்கு, ‘​​அனைவரின் கருத்துகளையும், யோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எவராக இருந்தாலும் அவரவர் அவர்களது எல்லையை கடைபிடிக்க வேண்டும். ஆனால், ஒபாமா அந்த எல்லையை தாண்டியுள்ளார்’ என்றார்.

Tags : Sarabjit Singh ,Rahul ,interview ,NCP , Rahul, NCP, Chairman, Sarabhavar, Interview
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை