×

ஆஸி. க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை .

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்  நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார். முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணியின் ஸ்கோர் போர்டு
 
ஷிகர் தவான் -1
கேப்டன் விராட் கோலி -9
சஞ்சு சாம்சன் - 23
கே.எல்.ராகுல் -51
மணிஷ் பாண்டே- 2
ஹர்திக் பாண்ட்யா - 16
ஜடேஜா - 47*

ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் போர்டு

ஆரோன் பின்ச் : 35
ஸ்டிவன் ஸ்மித் - 12
கிளென் மேக்ஸ்வெல்  -2(நடராஜன்)
டார்சி ஷார்ட்டை -34(நடராஜன்)
மிட்செல் ஸ்டார்க்கை -(நடராஜன்)
ஹென்றிக்ஸ் - 30
மேத்யூ வேட் -7
சீன் அபோட்- 12*
மிட்சல் சவ்ப்சன் - 12*

Tags : Aussie ,India ,T20 match ,Nadarajan ,Tamil Nadu , Australia, Natarajan, 3 wickets, record
× RELATED ஆஸி. 2வது இன்னிங்சில் 312/6 டிக்ளேர்...