சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு

ராமநாதபுரம்: புரெவி புயல் காரணமாக  நேற்று மலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக இன்று காலை வரை கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாகவும் வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலின் காரணமாகவும் கடற்கரை வழக்கத்துக்கு மறக்க சீற்றத்துடன் காணப்பட்டது. அது மட்டுமின்றி இந்த பகுதியில் சூறைக்காற்றும் விசிவந்த நிலையில் தங்கச்சிமடத்தை அடுத்துள்ள சூசையர் பட்டினம், அந்தோனியார் கோயில் மற்றும் வடக்கு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் காதலி வழக்கத்துக்கு மறக்க சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் அந்த கடற்கரை ஓரங்களில் சுமார் 20 மீட்டருக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கிறிஸ்தவ தேவலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு இன்னும் சற்று உயர்ந்து வந்தால் அந்த கடல் அலை வீடுகளுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி மீனவர்களிடம் கேட்ட போது புதிய மீன்பிடி துறைமுகம் அமைத்ததில் இருந்து கடலின் அளவு 10 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை உள்ளே வந்துள்ளது.

இதனால் இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கடல் அரிப்பை தடுக்க கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே கடல் நீர் மீனவ கிரமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புரெவி புயல் கரையை கடந்ததை அடுத்து தொடர்ச்சியாகவே கனமழை மற்றும் சாரல் மழையானது பெய்து வருகிறது.

Related Stories: