×

சிவகங்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

சிவகங்கை: சிவகங்கையில் அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறைதீர் முகாம்கள் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் 76 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் சிவகங்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வ குறிப்பிட்டுள்ளார்.

Tags : Palanichamy ,self-help groups ,Sivagangai , Palanichamy, Sivagangai
× RELATED மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூடுதல்...