×

பல பிரச்னைகள் குறித்து பேச வேண்டியுள்ளதால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்க! : சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் கடிதம்

புதுடெல்லி, : காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘விவசாயிகளின் போராட்டம், கொரோனா தடுப்பூசி தயாரித்தல், சீன ஊடுருவல், பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே கூட்ட வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வசதியாக சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். தற்போது நாடு மிக முக்கியமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.

அதனால், மேற்கூறிய அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் முழுமையான மற்றும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி குறுகியகால குளிர்கால சிறப்பு கூட்டத்தொடரை நடத்த கோருகிறேன். இதன்மூலம் நாட்டின் முக்கிய பிரச்னைகளை மக்கள் புரிந்துகொள்வதற்கும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு தெரியவரும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் உடனடியாக கூட்டுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.  ஆனால், குளிர்கால கூட்டத்ெதாடரை  வருகிற ஜனவரி 31ம் தேதி தொடங்கவும், அப்போது நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் இருக்கும் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.Tags : meeting ,Parliament ,Speaker ,Adir Ranjan , Issues, Parliament, Speaker, Adhir Ranjan, Letter
× RELATED முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதமா?:...