×

செம ஸ்பீடாக ஏறும் விலை.. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் 1.80 ரூபாயும், டீசல்.2.61 ரூபாயும் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் ஷாக்!!

சென்னை : சென்னையில் கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை 1.80 ரூபாயும், டீசல் விலை.2.61 ரூபாயும் அதிகரித்துள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் சோகமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. அதன்பிறகு இந்தப் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் வசமானது.பின்னர் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 14 நாட்களில் 12-வது முறையாக உயர்த்தியுள்ளன.கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.61 அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.76 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.45 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

Tags : motorists , Petrol, diesel, hike, motorists, shock
× RELATED கொரோனாவால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே...