×

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் 45,148 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் புதிய சாதனை

மும்பை: இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் 45,148 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக நேரம் நிறைவடையும் முன்பு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய சாதனை படைத்தது. சென்செக்ஸ் 516 புள்ளிகள் அதிகரித்து 45,148 புள்ளிகளை எட்டிப் பிடித்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் 45,080 புள்ளிகளில் நிறைவடைந்தது. ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 4%ம், சன் பார்மா பங்கு 3.8%ம் விலை உயர்ந்தன. பார்த்தி ஏர்டெல் பங்கு 2.9%, இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 2.8%, எஸ்.பி.ஐ பங்கு 2.7% விலை அதிகரித்தது.

Tags : Sensex ,Indian , Stock market
× RELATED 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்