×

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தரம் குறைக்கும் மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தரம் குறைக்கும் மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துறையாக மாற்ற திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை தமிழை அவமதிப்பதுடன் தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமாகும் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலையாக மாற்ற வேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Thirumavalavan ,Central Government ,Classical Tamil Studies Institute , Thirumavalavan, condemnation
× RELATED கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்