×

புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று: குந்துகால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் குத்துகள் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சூறாவளியில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன. புரெவி புயல் எச்சரிக்கையை அடுத்து மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசை படகுகளை பாம்பன் குந்துகால் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அடித்த சூறைக்காற்றில்  20 -க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளன.

நேற்று பகல் 3 மணியளவில் சேதமடைந்த படகுகளை மீனவர்கள் மிகுந்த சிரமத்துடன் மீட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை மணிக்கு 70 கி.மீ. வேகத்திற்கு பலத்த சூறைக்காற்று  வீசியது. இதன் காரணமாக 70 -க்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன்  குந்துகால் பகுதியில் சேதமடைந்துள்ளது. இது பற்றி மீனவர்கள் கூறுகையில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளி பகுதிகளில் 1,200 படகுகள் உள்ளன, ஆனால் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படியே படகுகள் பாம்பன் குந்துகால் பகுதியில் படகுகள் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரம், மண்டபம் போன்ற வழக்கமாக நிறுத்தப்படும் இடத்திலேயே நிறுத்திருந்தால் இது போன்ற சேதம் ஏதும் ஏற்பட்டிருக்காது என மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏற்பட்ட சேதத்திற்கு மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் படகு ஒன்றுக்கு 10,000 முதல் 1,00,000 வரை செலவு செய்தல் மட்டுமே நங்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும் என மீனவர்கள் கூறியுள்ளனர். படகுகள் சேதத்திற்கு மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையுமே முழுக்காரணம் என பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளை  தொடர்பு கொண்டபோது இந்த பகுதி பாதுகாப்பான பகுதியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியதால் தான் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் காற்றின் சூழல் மாரி இருப்பது தற்போதுதான் தெரியவந்தது. இருந்தாலும் இந்த பாதிப்புகளுக்கு முழு நிவாரணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் பெற்று தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : storm ,area ,Rameswaram ,port , In part due to the severe cyclone storm purevi Rameswaram: parked boats in the harbor encompasses damage
× RELATED கடல் சீற்றத்தால் திசைமாறும்...