×

இந்தியா - ஆஸி. இடையேயான முதல் டி20: ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கான்பெரா: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச முடிவு செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இன்று தமிழகத்தின் நடராஜன் அறிமுகமானார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களையும், சஞ்சு சாம்சன் 23 ரன்களையும், ஜடேஜா 44 ரன்களையும் எடுத்தனர். 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.

Tags : India ,Aussie ,T20I ,Australia , India, Australia
× RELATED ஆஸி. 2வது இன்னிங்சில் 312/6 டிக்ளேர்...