சக்ரா ஆசனத்தில் 50 மீட்டர் காரை கயிற்றால் இழுத்து மாணவன் உலக சாதனை

விருதுநகர் : விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் தேன்மொழி தம்பதியரின் மகன் ஷியாம் கணேஷ். இவர் நோபிள் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். யோகாவில் உலக அளவில் முதன் முறையாக காரை கயிறு கட்டி சக்ரா ஆசன நிலையில் 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடத்தில் கடந்து நோபிள் உலக சாதனை நிறுவனத்தின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

இம்மாணவன் யோகாவில் ஏற்கனவே நோபிள் உலக சாதனை நிறுவனத்தின் சாதனை புத்தகத்தில் இரண்டு முறை இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் காசோலையை பரிசாக பெற்றுள்ளார்.

இச்சாதனை பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜா தலைமையிலும், பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் மற்றும் பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ முன்னிலையிலும் நடைபெற்றது. இச்சாதனையை நடுவர் திலீபன் பதிவு செய்தார். பள்ளியின் முதல்வர் ஹெலன் சித்ரா பள்ளியின் துணை முதல்வர் பழனிகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: