மன்னார்குடி 3வது வார்டு காட்டுநாயக்கன் பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது-பொதுமக்கள் கடும் அவதி

மன்னார்குடி :மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு தெப்பக்குளம் காட்டுநாயக்கன் பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு தெப் பக்குளம் வடகரையில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் காட்டுநாயக்கன் தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

தெப்பக்குளத்திற்கும் பாமணியாற்றுக்கும் இடையே தாழ்வான பகுதியில் இந்த பகுதி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். இப் பகுதியில் தேங் கும் மழை நீர் அருகில் ஓடும் பாமணியாற்றில் வடிவதற்கு வடிகால் வசதி இருந்தும் ஆக்கிரமிப்பு மற்றும் வாய்க்கால் அடைப்பு காரணமாக தண்ணீர் வடிவத்தில் சிக்கல் உள்ளது.

இந்நிலையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டு நாயக்கன் தெருவில் மழை நீர் தேங்கி 10 க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்து விட்டது.

வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அப்பகுதியை இருந்த இளைஞர்கள் வடிய வைக்க முயற்சித்தும் வடிகால் வாய்க்காலில் உள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் பாமணியாற்றில் வடிய வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் தண்ணீரை வடிய வைக்க முயற்சித்தும் பலனில்லை. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி யை சேர்ந்த மக்கள் வேதனையில் உள்ளனர்.

எனவே, வருடம் தோறும் இப்பிரச்சனை வருவதால் தொலைநோக்கு பார்வை யுடன் காட்டுநாயக்கன் பகுதியில் தேங்கும் மழை நீர் தங்கு தடையின்றி பாமணியாற்றில் வடிவதற்கு ஏதுவாக உள்ள வாய்க்காலை முழுமையாக தூர் வாரி சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: