இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும்: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மருத்துவ வல்லுநர்கள் ஒப்புதல் தெரிவித்த உடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது துவங்கும். சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க சிறப்பான கட்டமைப்பு உள்ளது என மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>