×

கட்டிமேடு ஊராட்சியில் வீடுகள் சேதமடைந்த நபர்களுக்கு நிவாரணம்-கலெக்டருக்கு கோரிக்கை

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்றைப் பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இதுவரை மூன்று கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன மேலும் பல மண் சுவர் வீடுகள் காலனி வீடுகள் தொடர் மழை பொழிந்தால் சேதம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அரசு போர் கால அடிப்படையில் சுவர் இடிந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவும், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிதீவிர கன மழையின் காரணமாக கட்டிமேடு ஊராட்சியில் மூன்று இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. முகாமில் இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வழங்கும் நிவாரணப் பெட்டிகளை வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : persons ,houses ,Relief-Collector ,Kattimedu , Thiruthuraipoondi: Thiruvarur district continues to be flooded in Kattimedu panchayat near Thiruthuraipoondi
× RELATED தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு...