மானாமதுரை வந்த வைகை தண்ணீர்

மானாமதுரை:  விவசாய நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மானாமதுரையை கடந்து மதகு அணை சென்றது.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மதுரை அருகே மணலூரில் இருந்து பிரியும் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பாசன நீர் செல்கிறது.

கிராம கண்மாய்களில் பெரும்பகுதி வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் பாசனம் நடைபெறுகிறது. இந்தாண்டு பருவமழை மானாமதுரை வட்டாரப் பகுதியில் குறைந்து காணப்பட்டதால் பெரிய கண்மாய்கள் நிரம்பவில்லை. விவசாயிகளின் கோரிக்கையின்படி பாசனத்திற்காக வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை வந்தடைந்தது.

நேற்று காலை வேதியரேந்தல் மதகு அணையை அடைந்த தண்ணீர் அங்கிருக்கும் ஷட்டர்கள் மூலம் நெட்டூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு திருப்பி விடப்பட்டது.

Related Stories: