×

ரஜினியால் மட்டுமே ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும்.. : ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தகவல்

சென்னை : கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில், கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளர் ரஜினி இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். சொன்னதை செய்து காட்டுபவர் ரஜினிகாந்த். 2017ல் அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னதைத்தான் இப்போது உறுதிபடுத்தி இருக்கிறார். அவர் வார்த்தை தவறாத மனிதர். அதைத்தான் நிரூபித்திருக்கிறார். மற்றபடி ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதற்கு எந்த அழுத்தமும் இல்லை

ரஜினிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருப்பதால் மற்ற தலைவர்களைப்போல் அதிகம் பிரச்சாரம் செய்ய அவசியமில்லை. அவரின் உடல்நிலையை கருதி கிராமங்களில் எல்.இ.டி. திரை மூலமாக பிரச்சாரம் செய்வார் ரஜினி என்று தெரிவித்துள்ளார்.முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். ஆனால், மக்கள் அவர் தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள், என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,administration ,Supervisor ,Rajini People's Forum , Rajini, Corruption, Administration, People's Forum, Supervisor, Tamilruvi Maniyan
× RELATED எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை