×

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 573 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் விநாடிக்கு3,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் குன்றத்தூர், நந்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 25 -ம் தேதி 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அப்போது முதற்கட்டமாக 1,000கன அடிஉபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின் படி படியாக அதிகரித்து 9,000 கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.கடந்த முறை ஏரி திறக்கப்பட்ட போது முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மீண்டும் இந்த ஆண்டின் 2 -வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரி நேற்று திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி இருந்த உபரி நீர் வெளியேற்றம் பின் நீர் வரத்து குறைந்ததன் காரணமாக நீர் திறப்பு 573 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பாடவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Sembarambakkam Lake , Water discharge from Chennai Sembarambakkam Lake has been increased to 3,000 cubic feet
× RELATED சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் !