பைக் திருடிய வாலிபர் கைது

பெங்களூரு: வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடி வந்த வாலிபரை கைது செய்த போலீசார் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் அக்.23ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து உரிமையாளர் காட்டன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில், காட்டன்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் சையது மவுலா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளின் லாக்கை உடைத்து, திருடி விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான 5 பைக்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான சையது மவுலா மீது காட்டன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>