கனகதாசர் பெயரில் சமுதாய பவன்: எம்எல்ஏ ரூபகலா சசிதர் அறிவிப்பு

தங்கவயல்: ஏற்ற தாழ்வுகள் அற்ற சமூக மறுமலர்ச்சியை வலியுறுத்திய ஆன்மிக புலவர் கனகதாசரின் பெயரில் சமுதாய பவன் கட்டப்படும் என்று தொகுதி எம்எல்ஏ ரூபா சசிதர் அறிவித்தார். தங்கவயல் நகரசபை நேதாஜி பூங்காவில் கனகதாசரின் பிறந்த நாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ ரூபாசசிதர் அங்குள்ள கனகதாசிரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசும் போது, ``பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மிக புலவர் கனகதாசரின் சமூக மறுமலர்ச்சி கருத்துக்களை மறவாமல் பின்பற்றி வாழ வேண்டும்.

தங்கவயலின் நகர பகுதியிலோ அல்லது கிராம புற பகுதியிலோ இரண்டு ஏக்கர் பரப்பளவில் கனகதாசர் பெயரில் சமுதாயபவன் கட்டப்படும்”  என்றார்.நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, துணை தலைவி தேவி கணேஷ், கமிஷனர் சர்வர் மெர்ச்சன்ட், தாசில்தார் சுஜாதா, மற்றும் குருபர் சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>