மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டம் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்: எம்எல்ஏ புட்டரங்கசெட்டி குற்றச்சாட்டு

சாம்ராஜ்நகர்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வேறு மாவட்டத்துக்கு எடுத்து சென்றது தவறான செயல் என்று எம்.எல்.ஏ. புட்டரங்கசெட்டி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் சார்பாக சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ராமசமுத்ரா, காலிபுரா, உப்பாராபடவனே ஆகிய பகுதிகளில் 550 வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த திட்டம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா, பெங்களூரு பேட்டராயனபுரா ஆகிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தொகுதியை சேர்ந்த ஏழை, நடுத்தர, வீடு இல்லாத மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதே போல் மாவட்டத்தில் கட்ட வேண்டிய 550 வீடுகளை ராணிபென்னூரில் 250, பேட்டராயனபுரா பகுதியில் 300 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த கோரி அமைச்சர் வி.சோமண்ணாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நிச்சயம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கட்டும் பணிகளை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது வருத்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Related Stories: