சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா தமட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (48). காவலரான இவர் சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்து, தற்ேபாது கடூர் தாலுகா சக்கராயபட்டணா காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்தார். அதேபோல், சிக்கமகளூரு டவுன் ராமனஹள்ளி பகுதியின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு துணை சப்-இன்ஸ்பெக்டராக பதவி  உயர்வு கிடைத்தது.  டிச. 3ம் தேதி (நேற்று) அவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்க வேண்டி இருந்தது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பணியை முடித்துக் கொண்டு சித்தப்பா சக்கராயபட்டிணாவில் இருந்து சிக்கமகளூருவுக்கு வந்து கொண்டிருந்தார். கடூர் முக்கிய சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரது பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே சக்கராயபட்டிணாவில் இருந்து சித்தப்பாவின் சொந்த ஊரான தமட்டஹள்ளிக்கு சடலம் கொண்டு வந்து முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>