தங்க சுரங்கத்தை புனரமைக்க முடிவு எம்.பி.முனிசாமி முயற்சிக்கு கிடைத்த வெற்றி: பா.ஜ.க.தலைவர் பேட்டி

தங்கவயல்: மத்திய சுரங்க அமைச்சர் பிரகலாத் ஜோஷி தங்கச்சுரங்கம் புனரமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது கோலார் தொகுதி எம்.பி.எஸ்.முனிசாமியின் தொடர் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று தங்கவயல் நகர பா.ஜ. தலைவர் கமலநாதன் தெரிவித்தார். இது குறித்து தங்கவயல்  பத்திரிகையார் சங்க கட்டிடமான பிரஸ் பவனில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, கோலார் தொகுதி எம்.பி.எஸ்.முனிசாமி மக்களவையின் முதல் கூட்ட தொடரிலேயே, தங்கவயலின் ஒரே வாழ்வாதாரமான தங்க சுரங்கம் மூடப்பட்டது குறித்தும், அதனால் வேலை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது குறித்தும், தற்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருவாய்க்காக  தினசரி பயணம் செய்து பெங்களூர் சென்று பணியாற்றி திரும்பும் அவல நிலை குறித்தும் பேசினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தங்க சுரங்கத்தை புனரமைக்கவும், புதிய தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் வலியுறுத்தினார்.

அதன் காரணமாக மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்ச்சியாக தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்க  திட்டமிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கவயல் வந்த கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலங்களை பார்வையிட்ட பின், தங்கவயலில் தங்கம் உள்ளிட்ட உயர் ரக உலோகங்கள் உள்ளதா என்று ஆய்வு நடத்தப்படும் ஆய்வில் தங்க படிவங்கள் இருப்பது தெரிய வந்தால் தங்க சுரங்கம் புனரமைக்கப்படும். இல்லை என்றால் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றார். தற்போது மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தங்கவயலில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்க படிவம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தங்க சுரங்கம் புனரமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனால்   தொழில் பூங்கா திட்டத்தை  அரசு கைவிடாது. தங்கவயல் அருகே சென்னை -பெங்களூர் விரைவு தொழிற்பாதை செல்வதால் தொழில் பூங்கா நிச்சயம் அமையும். தங்கவயல் நகரின் இழந்த பொற்காலத்தை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கொண்டு வரும் என்றார்.

Related Stories: