அரசு நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்: கலெக்டருக்கு எம்எல்ஏ யதீந்திரா ஆலோசனை

மைசூரு: அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் போது மக்கள் பிரதிநிதிகளை கட்டாயம் அழைக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டவிதிகள் மீறியதாகிவிடும் என்று எம்.எல்.ஏ. யதீந்திரா சித்தராமையா தெரிவித்தார்.மைசூருவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: ``அரசு நிகழ்ச்சிகள், வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை செய்யும் போது அரசு அதிகாரிகள் கட்டாயம் மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். அவர்களை அழைக்காமல் நிகழ்ச்சிகள் நடத்தினால் புரோட்டகால் விதி மீறல் ஏற்படும்.  அதேபோல், மாவட்ட கலெக்டர் மக்கள் குறைகேட்பு கூட்டம், தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யும் போது தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏன் என்றால் அவர்களுக்கு அந்த நேரத்தில் வேறு எதாவது வேலைகள் இருந்தால் பாதிப்பு ஏற்படும். இதனால் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்றால் மக்கள் எம்எல்ஏக்களை தான் கேட்பார்கள். அதேபோல் எம்எல்ஏக்கள் அதிகாரிகளிடம் கேட்டு தகவல் பெறுவார்கள். மாவட்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி கே.டி.பி. கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மஞ்சுநாத், சா.ரா.மகேஷ், மேலவை உறுப்பினர் ரகு ஆச்சார் ஆகியோரை அவமானம் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது போன்ற சம்பவம் மறுபடியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரிகள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்”  என்றார்.

Related Stories: