×

கஞ்சா வளர்த்த விவசாயிக்கு போலீசார் வலை

சாம்ராஜ்நகர்: மக்காசோளம் பயிர்கள் மத்தியில் கஞ்சா செடிகள் வளர்த்த விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா பி.ஜி.தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, சிவநாகு. இவருக்கு வனப்பகுதியை ஒட்டி சொந்தமாக தோட்டமுள்ளது. இதில் மக்காசோளம் பயிரிட்டுள்ளார்.

அதே போல் பயிர்கள் மத்தியில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தார். இதை கவனித்த கிராமத்தினர் இது குறித்து டி.எஸ்.பி. நாகராஜிக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார். இவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தோட்டத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது கஞ்சா செடிகள் வளர்த்து வருவது தெரியவந்தது. அவைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விவசாயியை தேடி வருகின்றனர்.Tags : Police web for cannabis grower
× RELATED சென்னை நர்ஸ் தற்கொலை முயற்சி...