×

குடிபோதையில் மனைவியை கொன்ற கணவனுக்கு வலை

சிக்கபள்ளாபூர்:  குடிபோதையில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிக்கபள்ளாபூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கமலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.திருமணம் முடிந்த சிவகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அதேபோல், சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இது விஷயமாக தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அப்போது இவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்தனர்.  இந்நிலையில் சம்பவத்தன்று மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவகுமார் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.  இது குறித்து மஞ்சேனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த  போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற சிவகுமாரை தேடி வருகின்றனர்.


Tags : Drunk Web for husband who killed wife
× RELATED கணவன், மனைவி மீது தாக்குதல்