பெங்களூருவில் 2.30 லட்சம் கோடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிரடி திட்டம் தயார்

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் வரும் 20 ஆண்டுகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இப்போதே ₹2.30 லட்சம் கோடி செலவில் மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் சிறப்பான தட்ப-வெப்ப நிலை இருக்கும் மாநகரம் என்று பெருமை பெற்றுள்ள பெங்களூரு மாநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது. தற்போது மாநகரில் மக்கள் தொகை 1.28 கோடியாகவுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை 70 லட்சமாக உள்ளது.மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர பகுதியில் சரக்கு வாகனங்கள் இயங்குவதை தவிர்க்க, புறநகர் பகுதியில் வெளிவட்ட சாலைகள் (அவுட்டர் ரிங் ரோடு) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரின் புறநகர் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வசதி ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் மாநகரின் சுற்றுப்புற எல்லைகளை விரிவுப்படுத்தி வருகிறது.

20 ஆண்டுகளில் 3 கோடி மக்கள் தொகை: சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆய்வில் வரும் 20 ஆண்டுகளில் மாநகரின் மக்கள் தொகை 3 கோடியை எட்டும் என்றும் வாகனங்களின் பயன்பாடு 1.25 கோடி முதல் 1.60 ேகாடியை எட்டும் என்று தெரியவந்துள்ளது. இதை சமாளிக்க வேண்டுமானால் மாநகரில் போக்குவரத்து கட்டுப்படுத்த திட்டம் செயல்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய், விசாலமான சாலைகள் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.₹2.30 லட்சம் கோடி செலவில் மாஸ்டர் பிளான்:அதை தொடர்ந்து பெங்களூரு மாநகரில் வரும் 20 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய போக்குவரத்து திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும் பொறுப்பை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் பெங்களூரு மாநகர சாலை போக்குவரத்து இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இரு நிறுவனங்களும் ஆய்வு செய்து மாநில அரசிடம் கொடுத்துள்ள அறிக்கையில் ₹2.30 லட்சம் கோடி செலவில் ‘‘காம்ப்ரன்சிவ் மொபிலிட்டி பிளான்’’ செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையில் மூன்று கட்டங்களாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் புறநகர் ரயில் சேவை, மெட்ேரா ரயில் திட்டம் விரிவாக்கம், டிரான்சிஸ்ட் ஓரியன்டேட் டெவலப்மென்ட், இன்டர்மாடல் டிரான்சிஸ்ட் ஹப் உள்பட 80 திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ேமலும் சுற்றுச்சூழல் பாதுகாக்க மோட்டார் இல்லாத வாகனம், சைக்கிள் பயணத்திற்கு முன்னுரிமை, தூய்மையான நடைபாதை, புகையில்லாமல் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உள்பட 13 துணை திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.மாநகரில் இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதுகாக்க 174 சதுர கி.மீட்டர் சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. புதியதாக கொடுத்துள்ள மாஸ்டர் பிளானில் இது 600 சதுர கி.மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகரில் உள்ள 8 முக்கிய சாலைகளில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 சதவீதம் வாகனம் இயக்கம் தடை செய்ய வேண்டும். பஸ் பிரியாரிட்டி காரிடார், பெரிபெரல் ரிங்ரோடு அமைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முக்கிய சாலைகளை ஒருமுக நான்கு வழிசாலையாக மாற்றி பஸ், ஆட்டோ, பைக், சைக்கிள் செல்ல பாதைகள் அமைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சிபாரிசுகள்

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மாநகரில் 154 நடைப்பாதை ேமம்பாலம் அமைக்க வேண்டும், 50 சந்திப்புகள் (ஜங்ஷன்கள்) மேம்படுத்த வேண்டும், 192 முக்கிய சாலைகளை 6 வழி சாலைகளாக மாற்றம் செய்ய வேண்டும், 50 இடங்களில் அடுக்குமாடிகள் கொண்ட வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், 974 சதுர கி.மீட்டர் நடைப்பாதை சாலை அமைத்து, அதில் 174 சதுர கி.மீட்டர் சைக்கிள் பாதை அமைக்க வேண்டும், 103 சதுர கி.மீட்டர் சாலையை டெண்டர் சூர் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும்.

மேலும் 550 சைக்கிள் ஷேரிங் ஹப் அமைக்க வேண்டும், 30 இன்டர்மாடல் மற்றும் இன்டர் சேஞ்ச் ஹப் உருவாக்க வேண்டும், 10 இடங்களில் மெட்ரோ ரயில் மற்றும் பிஎம்டிசி பஸ் நிலையம் இணைக்கும் மேம்பாலம் அமைக்க வேண்டும் மற்றும் 92 கி.மீட்டர் ஹெலிவேட்டட் காரிடார் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகள் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Related Stories:

>