டெல்லியில் இரவுநேர ஊரடங்கு இல்லை : ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு பதில் மனு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய தலைநகரில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாது என உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்தது.டெல்லியில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, முடிவுகளை விரைவாக அறிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வக்கீல் ராகேஷ் மல்கோத்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் சுப்ரமொணியம் பிரசாதம் அடங்கிய அமர்வு, கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைபோன்ற ஒரு நடவடிக்கையை டெல்லியில் பிறப்பிக்கப்படுமா என்பது பற்றி கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கேள்வி  எழுப்பினர்.

நீதிபதிகளின் இந்த கேள்விகளுக்கு ஆம் ஆத்மி அரசு சார்பில் நேற்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வக்கீல் சந்தீப் சேதி மற்றும் கூடுதல் நிலை வக்கீல் சத்யகாம் ஆகியோர் தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், டெல்லியில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படாது. நகரில் தற்போதுள்ள நிலைையே தொடரும். கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடரும். இதே நிலை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை தொடரும் என்று தெரிவித்தனர்.

24 மணிநேரமாக குறைக்கலாம்

நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் நேரத்தை 48 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரமாக குறைக்க வேண்டும். அதோடு, மாதிரிகளை சேகரிக்கையில் மக்களிடம் பெறப்படும் அவர்களது செல்போன் எண்களில் பரிசோதனை முடிவுகளை ஆய்வகங்களுக்கு அனுப்பலாம்.  அதன்பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிடலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: