×

ஏரிக்கரையில் கஞ்சா விற்றவர் கைது

ஆவடி: ஆவடி, ஸ்ரீதேவி நகர், விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை ஓரமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் நேற்று முன்தினம் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும்,  அவரிடமிருந்து 1.300கிலோ எடையுள்ள கஞ்சா, 600 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில்,  அவர் ஆவடி, ராமலிங்கபுரம், 2வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (33) என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் சுரேஷை கைது செய்தனர்.


Tags : Cannabis seller ,lake , Cannabis seller arrested at lake
× RELATED கஞ்சா விற்றவர் கைது