சொல்லிட்டாங்க...

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றி, சமூகநீதி அடிப்படையிலான சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலம். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்வதை விட, குறைந்தபட்சமாக எதையும் ஏற்றுக்கொள்வது இந்தியாவுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

அதிமுக அரசில் எந்த ஊழலும் இல்லை. எனது உறவினருக்கு ெடண்டரை உலக வங்கி வழங்கியது. - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பாஜ அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது, பொய் வழக்கு போடுவது ஜனநாயக விரோதம்.  - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: