வடமாநிலங்களுக்கான வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை: சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கான வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - ஜல்பைகுரி - சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (02611, 02612) வரும் 16ம் தேதி காலை 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக 18ம் தேதி இரவு 9.15 மணிக்கு ஜல்பைகுரியில் இருந்து புறப்படும். இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

அதே போல் ராஜதானி சிறப்பு ரயில்களின் சேவை நாட்களும் மாற்றப்பட்டுள்ளது. எச்.நிஜாமுதின் - சென்ட்ரல் - எச்.நிஜாமுதின் (02434, 02433) இடையே இயக்கப்பட்டு வந்த ராஜதானி சிறப்பு ரயில்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்கும். வரும் 31ம் தேதி முதல் மாலை 3.35 மணிக்கு எச்.நிஜாமுதினில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ஜனவரி 1ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>