×

இடஒதுக்கீடு கோரி பாமகவினர் நேற்று 3ம் நாளாக போராட்டம்

சென்னை: இட ஒதுக்கீடு கேட்டு சேப்பாக்கத்தில் பாமகவினர் நேற்று 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஜி.கே.மணி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பாமக சார்பில் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சேப்பாக்கத்தில் 3வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னால் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர். சுமார் 200 பேர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

Tags : protest , Pamakavinar protest yesterday on the 3rd demanding reservation
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...